கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் அஞ்சல் ஓட்டு பதிவில் முறைகேடு - தி.மு.க. புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 14, 2021

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் அஞ்சல் ஓட்டு பதிவில் முறைகேடு - தி.மு.க. புகார்

சென்னை, ஏப்.14 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் அஞ்சல் ஓட்டு பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தி.மு.. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு..வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் தி.மு.. சார்பில் ஆஸ்டின் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தபால் ஓட்டுகள் பதிவாகி யுள்ளன. ஆனால் அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவருகிறது.

இதுபோன்ற முறைகேடுகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குடும்ப அட்டைதாரருக்கான

மண்ணெண்ணெய் அளவு குறைப்பு

சென்னை, ஏப்.14 மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதால், குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது தமிழகத்திற்கு 20 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண் எண்ணெய் ஒதுக்கீடு அளவின்படி அனைத்து மாவட்டத்திற்கும் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எனவே மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து புகார்கள் பெறப்படுவதை தவிர்ப்பதற்காக, மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து குடும்ப கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மராட்டிய மாநிலம்

தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கரோனா நோயாளிகள் பலி

புதுடில்லி, ஏப்.14 நாலச்சோப்ராவில் 2 தனியார் மருத்துவமனை களில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.

மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள விநாயகா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். அங்கு சுமார் 3 மணி நேரத்தில் 7 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மருத்துவமனையில் திரண்டு இருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.மேலும் அசம்பாவித சம்பவங் களை தடுக்க மருத்துவமனையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல நாலச்சோப்ராவில் உள்ள ரித்தி விநாயக் தனியார் மருத்துவமனையிலும் 3 கரோனா நோயாளிகள் பலியானார்கள். அங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் திரண்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் நடந்த மேற்கண்ட இவ்விரு சம்பவங்களின் முழுமையான விவரம் நேற்று தான் வெளிச்சத்துக்கு வந்தது.ஆக்சிஜன் பற்றாக் குறை காரணமாக தான் இரு மருத்துவனைகளிலும் நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், திங்கட்கிழமை தீவிர பற்றாக்குறை ஏற்பட்டு அது நோயாளிகளின் உயிரை பறித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.ஆக்சிஜன் பற்றாக் குறை காரணமாக ஒரே நாளில் 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு மருத்துவமனைகளில் 10 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததை வசாய்-விரார் மாநகராட்சி உறுதி செய்தது. ஆனால் அவர்கள் அனைவரும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழக்கவில்லை என்று மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது.இதேபோல சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவ மனைகளின் நிர்வாகங்களும் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளன.

உயிரிழந்த நோயாளிகள் ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டதாகவும், அதுகுறித்து குடும்பத்தினரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment