மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கருநாடகாவில் பொது முடக்கம்

எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு,ஏப்.14 கருநாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம்  என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை பின்பற்ற வேண்டும். கேட்கா விட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும்.

அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக  மாவட்டத்தில் இரவு ஊர டங்கு உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட் டுள்ளது. முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை மக்கள் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமுடக்கம் அறிவிக்க அரசு தயாராக இல்லை. மக்கள் ஒத் துழைத்தால் கரோனா 2ஆவது அலையிலிருந்து கட்டாயம் மீளலாம் என்று கூறினார்.

கரோனாவால் குழந்தைகள் கடும் பாதிப்பு:

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய டில்லி முதல்வர் கோரிக்கை....

புதுடில்லி. ஏப். 14 கரோனா தொற்றின் தீவிர பரவல்காரணமாக  பள்ளிக் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால்,  சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

நாடு முழுவதும்   சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி தொடங்குகிறது. அதுபோல, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ  தேர்வுகள் மே 4 முதல் 15ஆம் தேதி வரையிலும் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களிவல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, பகுதி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்  சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,   சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம்  கூறிய கெஜ்ரிவால், டில்லியில் 6 லட்சம் மாணவ-மாணவிகள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.  இந்த தேர்வு பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

ஆனால், மாநிலத்தில் பரவி வரும் தீவிர தொற்று பரவல், பள்ளிக்குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித் துள்ளது. இந்த சூழலில் தேர்வு நடை பெற் றால், மேலும் பெரிய அளவிலான கரோனா பரவலுக்கு வழிவகுக்கும். தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ மாணவிகளின் வாழ்க்கையும், ஆரோக் கியமும் மிகவும் முக்கியம். இதனை கருத் தில்கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-2 பொதுத் தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் 

சென்னை, ஏப்.14 பிளஸ்-2 பொதுத் தேர்வை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, அதில், 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பிளஸ்-2 மாணவர்களுக் கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மே) 3ஆம் தேதி தொடங்க இருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நடக்க இருப்பதால், அதற்கு மறுநாள் நடைபெற இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வு தேதியை மட்டும் மாற்றி அரசுத் தேர்வுத்துறை நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இதுதவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த பொதுத் தேர்வை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் அய்..எஸ். அதி காரிகள் ஜெயந்தி (பாடநூல் கழகத் இயக் குநர்), லதா (சமக்ரா சிக்சா திட்ட இயக்குநர்), அமிர்தஜோதி (சமக்ரா சிக்சா திட்ட உதவி இயக்குநர்), நிர்மல்ராஜ் (ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்) நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர்கள் மாவட்டந்தோறும் பொதுத்தேர்வு நடைபெற உள்ள பள்ளி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Comments