அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத்தின் சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2021) காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவர்தம் உருவப் படத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவிக்க, அண்ணல் அம்பேத்கர் வாழ்க வாழ்க வாழ்கவே என தோழர்களால் பலத்த ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், சென்னை மண்டல கழக இளைஞரணி அமைப்பாளர் கோ.சுரேசு மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், பெரியார் திடல் அனைத்துப் பணித் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Comments