செய்தியும், சிந்தனையும்....!

அஞ்சுவது அஞ்சாமை பேதமை!

*           எடப்பாடி பழனிசாமியை பார்த்து திமுக பயப்படுகிறது.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா 

>>           மூட்டைப்பூச்சிகளையும் கொசுக்களையும் பார்த்துக் கூடத்தான் பயப்பட வேண்டியுள்ளது.

தேர்தல் நேரத்தில் செத்தவர் பிழைப்பார்!

*           கோவை மாவட்டத்தில் இறந்தவர்கள் பெயரால் தபால் வாக்குப் போட விண்ணப்பம்  - அதிகாரிகள் விசாரணை   

>>           தேர்தல் நேரமல்லவா! தேர்ந்தெடுத்த 'தில்லு முல்லுகள் கோலோச்சுமே! செத்தவர்கள் சிவலோக பதவி' அடைந்து அங்கிருந்து நேராக வாக்களிக்க விரைந்து வருவர் என்று நம்புவோமாக!

வம்படி வழக்கு!

*          அரசு ஊழல் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக பீகார் மாநில அரசுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது - உச்சநீதிமன்றம்  

>>           மக்கள் மன்ற தண்டனையிலிருந்து மயிரிழையில் தப்பிய அரசாயிற்றே!

சமாதானம்

*           வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா கண்டறிவதில் சிக்கல்        - மாநகராட்சி ஆணையர்    

>>           இப்பொழுதே சமாதானம் சொல்ல ஆரம்பித்து விட்டார்களா? 

Comments