அட அண்டப்புளுகே - உன் பெயர்தான் அதிமுகவா?

அதிமுக கடைசிக் கடைசியாக படாடோபமான விளம்பரங்களைக் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, அபாண்ட பொய்களை அபாரமாக பக்கம் பக்கமாக வெளியிட்டு, மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி வாக்குகளைப் பறிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

குறிப்பாக 'நீட்' தேர்வு பற்றிய தகவல் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்!

தி.மு.. அங்கம் வகித்த கூட்டணி அரசில்தான் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு  எதிராக மறுபரிசீலனைக்கு உச்சநீதிமன்றத்தை நாடியது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி என்று கொஞ்சம்கூடப் பதற்றமின்றி அபாண்ட பொய் அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறதே .தி.மு.. -

உண்மை என்ன? உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது 2016இல்! 'நீட்' செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது 11.4.2016. பா... அவசர சட்டம் போட்டது 24.5.2016. அதன் அடிப்படையில்  நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டது 5.8.2016;   2014  முதல் மத்தியில் ஆட்சியில் இருந்தது -  அதிமுக கூட்டணியான பா...வே! 'நீட்' செல்லும் என்ற தீர்ப்பு, அவசர சட்டம் எல்லாம் அதிமுக கூட்டணி ஆட்சியான பா... கால கட்டத்தில்தான்!

2016ஆம் ஆண்டு என்பது 2014க்குப் பிறகு தான் என்ற அடிப்படைக் கணக்குக் கூடத் தெரியாதவர்களா ஆட்சியில் இருக்கின்றனர்?

இந்தப் பொய்யர்களுக்குத் தேர்தலில் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிப்பீர்!

Comments