தருமபுரி கழக புரவலர் கே.ஆர்.சின்னராஜ் மறைவு - இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

தருமபுரி கழக புரவலர் கே.ஆர்.சின்னராஜ் மறைவு - இறுதி மரியாதை

தருமபுரி, ஏப். 11- பெரியார் பெருந் தொண்டரும், கழக புரவலரும், தருமபுரி விடுதலை வாசகர் வட்டத் தலைவருமான கே.ஆர்.சின்னராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் தனது 87 வயதில் 8.4.2021 அன்று பகல் 12.30 மணியளவில் தருமபுரி சோகத்தூர் இல்லத்தில் மறைவுற்றார்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலை மையில் தலைமை கழகத்தின் சார்பில் திராவிடர் கழக மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன் மறைந்த கே.ஆர். சின்னராஜ் உடலுக்கு மாலை வைத்தும், கழக கொடியை போர்த்தியும் தோழர்கள் வீரவணக்க முழக்கமிட்டும் இரங்கலை செலுத்தினர்.

தொடர்ந்து அங்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செயலாளர் மு.பரமசிவம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கடத்தூர் ஒன்றிய செயலாளர் தனசேகரன், ஓசூர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கதிர் செந்தில், மேனாள் மாவட்ட தலைவர் இரா,வேட்ராயன், அதிமுக நகர செயலாளர் பூக்கடை இரவி, தொழில்முறை சார்பில் ஆடிட்டர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி துணைத் தலைவர் தீ.சிவாஜி, திராவிடர் கழக தலைவர், ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட வீர வணக்க இரங்கல் உரையை பொதுமக்களுக் காக படித்தார். அதன் பிறகு தலைமை கழகத் தின் சார்பில் மறைந்த கே.ஆர்.சின்னராஜ் அவர் களுக்கு கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் புகழுரையாற்றினார்.

இந்நிகழ்வை மண்டல கழக தலைவர் .தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைந்து நடத்தினார்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் .மாதன், வாசகர் வட்ட தலைவர் .சின்னராஜ், செயலாளர் மா.சுதா, மாவட்ட இணை செயலாளர் கு.சரவணன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், பொதுக்குழு உறுப் பினர் .தீர்த்தகிரி, பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கே.ஆர்.குமார், கடமடை கோவிந்த ராஜ், சங்கரன், வழக்குரைஞர் தீ.சோழ வேந்தன், மண்டல இளைஞரணி செயலாளர் வண்டி ஆறுமுகம், கிருட்டிணகிரி மாவட்ட .. செயலாளர் .வெங்கடேசன், மத்தூர் ஒன்றிய செயலாளர் வி.திருமாறன், துணைத் தலைவர் தனஞ்செழியன், பாப்பாரப்பட்டி சுந்தரம், ஆசிரியரணி .மணிவேல், .சாமிநாதன், தருமபுரி இராமச்சந்திரன், போச்சம்பள்ளி ஞானசேகரன், குருபரஅள்ளி இளங்கோ, பாரதி, அசோக்குமார் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பணியா ளர்கள் உறவினர்கள் தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

கே.ஆர்.சின்னராஜ் அவர்களின் வாழ் விணையர் சின்னப்பாப்பா, மகள்கள் இராணி, அமுதா, இந்திரா காந்தி, மகன் ஆசைத்தம்பி ஆகியோருக்கு ஆறுதல் கூறிய கழக தோழர்கள், கே.ஆர்.சின்னராஜ் உடலுக்கு கழகக்கொடி போர்த்தி வீரவணக்க முழக்கமிட்டு சுமந்து சென்று மாலை 7 மணிக்கு அடக்கம் செய்தனர். அவரது மறைவையொட்டி தமிழர் தலைவர் அறிக்கையை மாவட்ட திராவிடர்  கழகம் சார்பில் துண்டறிக்கையாக வழங்கியதுடன் நகர் முழுவதும் சுவரொட்டி அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டது.

No comments:

Post a Comment