கரோனா பரவலை தடுக்க சிறந்த வழி எது?

உலக சுகாதார நிறுவனம் தகவல்

புதுடில்லி, ஏப்.11 கரோனா பரவலை தடுக்க சிறந்த வழி எது? என உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு, கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் பேட்டி அளித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு, கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகை யில், கரோனா வைரஸ் பரவ லை தடுத்து நிறுத்துவதற்கு கரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறை களை அனைவரும் பின்பற்று வதுதான் சிறந்த வழி ஆகும்.

பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப் பட்டவர் களின் தொடர்பு தடம் அறியவும், பாதிப்புக்குள் ளானவர்களை தனிமைப் படுத்தவும், சிகிச்சை அளிக் கவும் முயற்சிகளை மேம் படுத்த வேண்டும் என கூறினார்.

மேலும், கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போரா டுவதற்கு பொதுமக்கள் இருமும்போது அதன்துளி கள் மற்றவர்கள் மீது படாத வகையில் முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும், கைச்சுத்தம் பராமரித்து வர வேண்டும். தனிமனித இடை வெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத் தினார்.

தனி மனித இடை வெளியை பின்பற்றுவதும், போக்குவரத்து கட்டுப் பாடுகளை கடைப்பிடிப்பதும் கரோனா பரவலை மெது வாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடால் மும்பையில் பல தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்டன பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Comments