செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 29, 2021

செய்தியும், சிந்தனையும்....!

இதிலும் மனுதர்மமா?

* கோவிட் ஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் மாநில அரசுக்கு ரூ.300, மத்திய அரசுக்கு ரூ.150 விலைக்கு வழங்கும்..

>> இதில் என்ன மத்திய அரசு - மாநில அரசு பேதம் - ஒரே ஊசிதானே?

பகவான் சக்தி கேள்விக்குறி!

* வைத்தீஸ்வரன் கோவில் குட முழுக்கு - பக்தர்கள் வர 144 தடையாணை.

>> பக்தி முத்தினால் நோய்த் தொற்றுதான்.

‘பீம் சிங், இது என்ன குழப்பம்?'

* ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இடம் மாற்றம்.

>> தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே இடத்திலா - ஏன் நாடு முழுவதும் பரவலாக்கக் கூடாதா?

இ(ற)ரங்காதோ மனம்?

* உ.பி.யில் கரோனாவுக்கு மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலி!

>> சாமியார் முதல்வர் ஆயிற்றே- பிரார்த்தனை செய்கிறாரோ!.

நோயற்ற உள்ளம்!

* இந்தியர்களுக்கு நிதி திரட்டும் அமைப்பைத் தொடங்கினார் இங்கிலாந்து இளவரசர்.

>> மனிதநேயம் உலக மானுடத்திற்கு உரியது.

கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!

* இரண்டு கிலோ அரிசி போதாது என்றால், நீங்கள் சாவது நல்லது.

- கருநாடக (பா.ஜ.க.) அமைச்சர் உமேஷ் கட்டி

>> பா.ஜ.க. ஆட்சியில் வாழ்வதைவிட சாவதுதான் மேலா?

அச்சமா - நம்பிக்கை இழப்பா?

* பெங்களூருவில் 3000 கரோனா நோயாளிகள் தலைமறைவு.

>> காவல்துறைக்கு இந்த வேலை வேறா?

No comments:

Post a Comment