வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் 170ஆம் ஆண்டு பிறந்த நாள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள்

 கழகத்தின் சார்பில் படத்திற்கு மாலை அணிவிப்பு

சென்னை, ஏப்.29 வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களின் 170 ஆம் ஆண்டு பிறந்த நாள் (27.4.2021) - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் (29.4.2021) ஆகியன முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவர்தம் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் மனோகர், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேசு, சண்முகப் பிரியன், பொறியாளர் குமார் மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் பங்கேற்றனர்.

Comments