"வைத்தியரே! முதலில் உங்கள் நோயை குணப்படுத்திக் கொள்வீர்!"

விளம்பரமல்ல - வீண் புரளிகள்!

பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்த ...தி.மு..வின் பார்வைக்கு....

(1) தி.மு.. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் மானமிகு  கலைஞர் அவர்களின் முயற்சியால் செம்மொழித் தகுதி 2004ஆம் ஆண்டிலேயே கிடைத்திருக்க, 2006ஆம் ஆண்டு ...தி.மு.. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 30) தமிழைச் செம்மொழியாக்குவோம் என்று வெளியிட்ட அதிமேதாவிகள் யார்?

(2) அண்ணாவின் நூற்றாண்டையொட்டி 230 கோடி ரூபாய் செலவில், திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அண்ணாவுக்குப் பொருத்த மான வகையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை - 11 லட்சம் நூல்களைக் கொண்ட அறிவுக் கருவூலகத்தை மருத்துவமனையாக மாற்றத் துடித்தது யார்? (உயர்நீதிமன்றத்தின் தடை தானே அதனைத் தடை செய்தது?)

3) 9 லட்ச சதுர அடியில் ரூ.450 கோடி செலவில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றத்தை உள்ளடக்கிய தலைமைச் செயலகத்தை மருத்துவ மனையாக மாற்றிய ஆட்சி எந்த ஆட்சி?

4) செம்மொழி மாநாட்டையொட்டி அறிவிக் கப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டு  வரப்பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தை நொறுக்கிய ஆட்சி எது? பழங்காலச் சுவடிகளும் அரும்பெரும் நூல்களும் குப்பையாக்கப்பட்ட கொடுமைக்குப் பொறுப்பு எந்த ஆட்சி?

5) தி.மு.. ஆட்சியில் அறிமுகப்படுத்திய சமச்சீர்க் கல்வியை செயல்படுத்த முடியாது என்று அடம் பிடித்தது யார்? சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதனை ஏற்காது உச்சநீதிமன்றம் சென்றது யார்? சமச்சீர்க் கல்விக் கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குப் பதிலாக ரூ.250 கோடி மக்கள் பணத்தில் பழைய புத்தகங்களை வெளியிட்டது ஏன்? உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பால் சமச்சீர்க் கல்வியை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், வீம்புக்காக பழைய புத்தகங்களை அச்சிட்ட வகையில் ரூ.250 கோடி மக்கள் பணம் பாழாகவில்லையா? இதற்குக் காரணம் யார்? பொறுப்பு யார்?

ஆத்திரம் அலை புரள - சமச்சீர்க் கல்வி  பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...' என்று தொடங்கும் குறளோடு, திருவள்ளுவர் படத்தையும் கிழித்து எறிந்தது. எந்த ஆட்சி? பல பக்கங்கள் கறுப்புச் சாயம் பூசப்பட்டது எந்த ஆட்சியில்?

6) ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில், தந்தை பெரியார் அவர்களின் சமத்துவக் கோட்பாட்டை முன்னிறுத்தும் வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூளையில் உதித்த பெரியார் நினைவுச் சமத்துவபுரத்திற்கு ஆக்கம் தராமல், பராமரிப்பு இன்றி அழிவு செய்தது, செய்து வருவது எந்த ஆட்சி?

7) சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் தொழில் வளர்ச்சியை முன்னெ டுத்துச் செல்லவும் தி.மு.. ஆட்சியில் 2006ஆம் ஆண்டில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ரூ.1815 கோடி செலவில் உருவாக்கப்பட இருந்த பறக்கும் பாலத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கியது எந்த முதல் அமைச்சர்?

8) 1997 ஆண்டில் தி.மு.. ஆட்சியில், நெடுஞ்சாலைத் துறையில் நியமிக்கப்பட்ட 9729 சாலைப் பணியாளர்களை ஒரே ஆணையில் வீட்டுக்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்களை நடு வீதியில் நிறுத்திய ஆட்சி எது?

(9) தி.மு.. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்தால் 13 ஆயிரம் மக்கள் பணியாளர்களை ஒற்றை வரி ஆணையால் வேலை நீக்கம் செய்த ஆட்சி எது?

(10) திருநங்கைகள் நல வாரியம் நசிந்து போகக் காரணம் யார்?

11) தொல்காப்பியர் என்ன தி.மு..வா? அவர் பெயரால் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட 'தொல். காப்பியர் பூங்கா'வைக் குப்பை மேடாக ஆக்கிய ஆட்சி எந்த ஆட்சி? அதன் பெயர் அடையாறு பூங்கா என்றும் மாற்றப்பட்டது ஏன்?

(12) 1921ஆம் ஆண்டில்  மறைமலை அடிகள் உட்பட தமிழ் அறிஞர்கள்கூடி 'தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு' என்ற முடிவை - தமிழ்ப் பண்பாட்டு உணர்வுடன் - தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று திமுக ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முனைப்பில் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது எந்த ஆட்சி - எந்த முதல் அமைச்சர்?

(13) சிறுபான்மை மக்களான முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று அடம் பிடித்த முதல் அமைச்சர் யார்?

(14) இன்னும் ஈழம் அமையவில்லை - எனவே ஈழம் என்று சொல்ல முடியாது - இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ண வில்லை. ஒரு யுத்தம், ஒரு போர் வரும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இலங்கையில் இன்று என்ன நடக்கிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல், விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (டாக்டர் நமது எம்.ஜி.ஆர். அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடு 18.1.2009) என்று சொன்ன முதல் அமைச்சர் யார்? யார்?

15) இராமன் பாலம் என்று புராணக் கற்பனைக்கு முதல் இடம் கொடுத்து, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்புகளை முடக்கிய முதல் அமைச்சர் யார்? யார்?

16) அய்..எஸ். பெண் அதிகாரியின் முகத்தில் ஆசிட்! நினைவிருக்கிறதா?

(17) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்  (TNPSC)  நடத்தும் தேர்வில் வெளி மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று சட்டம் இயற்றி தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர் காலத்தை இருட்டாக்கிய துரோகத்துக்குச் சொந்தக் காரர்கள் யார்? யார்?

இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு.

பக்கம் பக்கமாக விளம்பரம்

கொடுக்கும் ஆளும் .தி.மு.. 

பதில் சொல்லுமா? எங்கே பார்ப்போம்!

முக்கியக் கவனத்துக்கு

தி.மு.. தேர்தல் அறிக்கையில் தொழிலாளர் நலத்திட்டம் (வெல்ஃபேர்) என்கிற வார்த்தை 55 தடவை இடம் பெற்றுள்ளது. கல்வி குறித்து 61, பெண்கள் சிறுமிகள் குறித்து 60, வேலை வாய்ப்பு 66, ஊட்டச்சத்து சுகாதாரம் வார்த்தை 17 தடவை இடம் பெற்றுள்ளது.


Comments