கொள்கை வீரர் பொறியாளர் முகிலரசுக்கு நமது வீர வணக்கம்!

கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மானமிகு தோழர் இன்பக்கனி அவர்களது தம்பி மானமிகு பொறியாளர்

. முகிலரசு B.E.  (வயது 60) அவர்கள் உடல் நிலை குன்றி,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (5.4.2021) திங்கட்கிழமை காலை இயற்கையெய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.

இவர்களது தாய், தந்தையரான இந்திராணி - சபாபதி அவர்கள் காலந்தொட்டே அத்துணைப் பேரும் மாறாத கொள்கையாளர்கள். எடுத்துக்காட்டாக என்றும்விளங்கும் பெரியாரிஸ்டுகள்.

அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டும் அல்ல; நம் இயக்கத்திற்கே மாபெரும் இழப்பு ஆகும்!

மறைந்த தோழர் . முகிலரசு அவர்கள் பண்பாளர்; சிறந்த கொள்கையாளர்; அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் திருமதி. சுமதி மலர்விழி, அவரது மகன் சங்கமித்திரன் மற்றும் சகோதரிகள் - குடும்பத்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக.

அவருக்கு நமது இயக்கத்தின் சார்பில் வீர வணக்கம்.

 கி.வீரமணி

 தலைவர்,             

திராவிடர் கழகம்   

5-4-2021              

குறிப்பு:  இறுதி நிகழ்வு இன்று மாலை 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

முன்னதாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மறைந்த பொறியாளர் . முகிலரசு உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

முகவரி : பழைய எண் 15/புதிய எண் 37, அய்ந்தாவது குறுக்குத் தெரு, தீட்டித் தோட்டம், பெரம்பூர், சென்னை-600011   மொபைல் : 73580 59157, 93810 15755

Comments