கரோனாவால் பாதிக்கப்பட்ட நல்லகண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்

சென்னை, ஏப்.5  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

(வயது 95). கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அங்கு அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமடைந்த அவர் நேற்று (4.4.2021)  வீடு திரும்பினார்.

Comments