செய்தியும், சிந்தனையும்....!

 மறந்தே போச்சு!

*         அஞ்சல் நிலையங்கள் அரை நாள் மட்டுமே செயல்படும்.

>>           , அப்படி ஒரு துறை இருக்கிறதா? அதுதான் பல்பொருள் விற்பனை அங்காடி ஆகிவிட்டதே!

இப்பொழுதென்ன அவசரம்?'

*          அனுமதியளித்து 7 மாதங்கள் ஆகியும் 130 ஆக்சிஜன் ஆலைகளில் உற்பத்தி தொடங்காதது ஏன்?

- கே.எஸ்.அழகிரி, தலைவர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

>>           அதுக்கென்னு கால, நேரம் வர வேணாமா?

விடாதே பிடி!'

*          பணிக்கால முறைகேடுகள் - சூரப்பாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு.

>>           பெரிய இடத்து போஸ்டிங்... ஆனாலும் என்ன?

அகத்தின் அழகுமுகத்தில்!'

*           முகக்கவசம் அணியாத 6 லட்சம் பேர்மீது வழக்கு; 820 வாகனங்கள் பறிமுதல்.

>>           முகக்கவசம் கரோனாவைத் தடுக்கும் மூக்கணாங்கயிறு!

குடியைக் கெடுக்கும் குடி!

*           புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல்.

>>           குடிமக்கள் தப்பிக்க, இது அவசியம் தேவை.

விளையும் பயிர்?

*           டிக்கெட் வாங்கக் கூறியதால் பேருந்து நடத்துநரை கத்தியால் வெட்டிய சிறுவர்.

>>           நாடு எங்கே போகிறது?

ஆட்சியைக் கார்ப்பரேட்டுகளே அதிகாரப்பூர்வமாக நடத்துவார்களோ?

*           கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தனியார் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளும்.

>>           பெட்ரோல், டீசல் விலையைப் போலவா!

பாதுகாப்பு - ஜோசியத்தால் அல்ல!

*         மத்திய பிரதேசத்தில் பாதுகாப்புக் கவச உடையில் நடந்த திருமணம்.

>>           வாழ்க்கையும், பாதுகாப்பாக அமை யட்டும் - வாழ்த்துகள்!

இந்திய அரசுக்குச்சமர்ப்பணம்!'

*           கருநாடக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 8 பேர் சாவு.

>>           வாய்ச் சவடாலை முதலில் மத்திய அரசு நிறுத்தட்டும்!

தூரத்துச் செய்தி

*           இந்தியாவில் கரோனா தாக்கிய 15 விழுக் காட்டினருக்கு மட்டும்தான் சிகிச்சை தேவைப்படுகிறது.

- உலக சுகாதார நிறுவனம் கருத்து

>>           ஆனாலும், படுக்கை வசதிகள் கிடைக் காமல் இந்தியாவில் நோயாளிகள் தவிப்பு.

Comments