கும்பமேளா எனும் குரோனா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

கும்பமேளா எனும் குரோனா!

 மும்பை, ஏப். 18 கும்பமேளாவிற்கு சென்று திரும் பியவர்களால் நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகம் பரவுகிறதே என்று மும்பை மேயர் கிசோரி பெட்னேகரிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:

‘‘கும்பமேளாவிற்கு சென்று வருபவர்கள் அனை வரையும் அவர்களது சொந்தச் செலவில் தனிமைப் படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பக்தி என்பது அவரவர்க்குள்ளே இருக்கட்டும், இது பக்திக்கான நேரம் இல்லை. சக்திக்கான நேரம், இந்த நேரத்தில் பக்தியைப் பார்த்தால் சக்தியிழந்து நிலமை மோசமாகிவிடும்,

 ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையங்களில் டில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வருபவர்களை கடுமையாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இதற்காக காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைகளை இணைத்து குழு அமைத்துள்ளோம்.

 கும்பமேளாவிலிருந்து வருபவர்கள் பிரசாதம் போல் கரோனாவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். இதை மறுக்க முடியாது. ஆகையால் எங்களது நடவடிக்கை கும்பமேளாவிலிருந்து வருபவர் கள் மீது கடுமையாகத்தான் இருக்கும். இது பக்தியைப் பார்த்து ஒதுங்கிப் போகும் காலம் அல்ல, மருத்துவ சக்திக்கு வாய்ப்பு கொடுக்கும் நேரம் ஆகும்'' இவ்வாறு செவிலியரும், மும்பை மேயருமான கிசோரி பெட்னேகர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சாமியார் அறிவிப்பு

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போன்ற நோய்தொற்று உலகில் வரும், அதற்காக பராம்பரிய விழாவை கைவிடக் கூடாது, எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும், அப்படி இறப்பவர்கள் புண்ணியம் செய்திருந்தால் மீண்டும் பிறக்க மாட்டார்கள். பாவிகள் மீண்டும் பிறப்பார்கள். இப்போது பாவம் அதிகரித்து விட்டது ஆகையால் தான் பூமியில் மக்கள் தொகை பெருகிவிட்டது,

 அந்த பாவத்தை தீர்க்கத்தான் இது போன்ற கும்ப மேளா "புனித" குளியல்கள்,

 ஆகவே யாரும் இது குறித்து பயப்படவேண்டாம். எங்களது தலைவர் ரவீந்திர பூரிஜி மேற்பார்வையில் மகராஜ் 26 ஏப்ரலிலும், இறுதி நாளான மே 30 ஆம் தேதி வரை கும்ப மேளா நடந்துகொண்டு தான் இருக்கும்.

இதனால் பாவம் தீர்ந்து மனிதப் பிறப்புச் சக்கரம் உடையும், ஆகையால் அனைவரும் கும்பமேளாவில் வந்து கலந்து கொள்ளலாம்,

நாங்கள் கரோனா தடுப்பு ஊசிப் போட்டுக் கொள் வோம்; மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வோம். அரசு கூறும் அனைத்து ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டு அதன் படி நடப்போம்.

 அதே வேளையில் கும்பமேளா இறுதிநாள் வரை  நடைமுறையில் இருந்தது போலவே இந்த ஆண்டும் இருக்கும்.

 - சாமியார் நாராயண் குருமகராஜ் ஜூனா அகாரா என்ற சாமியார் அமைப்பின்

செய்தித் தொடர்பாளர் கரோனா பாசிட்டிவாம்!

எனக்கும் கரோனா பாசிட்டிவ் என்றுதான் கூறியிருக் கிறார்கள். ஆனால் நான் கும்ப மேளா வில் கலந்து கொண்டு வருகிறேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

(ஆகவே அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூற வருகிறாரா?)

No comments:

Post a Comment