எச்சரித்தும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உ.பி. முதல்வருக்குக் கரோனா தொற்று

லக்னோ, ஏப்.18 உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் ஏப்ரல் 13 அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இவருக்குக் கரோனா தொற்று வர ஒரு முக்கிய காரணம் 9.4.2021 அன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்யச் சென்றதே!

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர காண்ட் மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள மத்திய  அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுரை கூறியிருந்தது.

ஆனால், முதல்வர் சாமியார் ஆதித்ய நாத் அதைப் பொருட்படுத்தாமல் லக்னோ வில் இருந்து வாரணாசி சென்று அங்கு சாமியார் குழுவுடன் லக்மிபுரா அனுமன் காட் பகுதியில் மதம் தொடர்பான நிகழ்வு களில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் கும்பமேளாவில் குளியல் போட்டுவிட்டு வந்த பல சாமியார்களும் இருந்தனர்.

 அதன் பிறகு அந்த சாமியார்கள் குழுவோடு இவரும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார்.

 அப்படி பூஜை செய்து வந்த பிறகு மறுநாள் 10.4.2021 அன்று அவருக்கு சிறிது உடல் நலம் குன்றியிருந்தது, இருப்பினும் அவர் கரோனா தடுப்பு ஊசி போட்டதால் ஏற்பட்ட சோர்வு என்று கூறி தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததை அடுத்து 12 ஆம் தேதி சோதனை நடத் தியதில் அவருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதனை அடுத்து அவர் 13 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவர் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரி வில் வைக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் மற்றும் ரத்த அழுத்தக் குறைபாடு காரண மாக 24 மணி நேரமும் மருத்துவக் கண் காணிப்பில் இருந்து வருவதாக லக்னோ வில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

ஒரு முதல்வராக இருந்துகொண்டு மக் களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டி யவர் சுகாதாரத்துறையின் ஆலோசனை யைக் கேட்காமல் தனக்குத் தொற்றை ஏற்படுத்திக்கொண்டு தன்னுடன் பணி யாற்றும் பல அதிகாரிகளுக்கு தொற்றைப் பரப்பியும் உள்ளார்.

சாமானியராக இருந்தால் இந்நேரம் தொற்றைப் பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால் பரப்பியது முதல்வர் ஆயிற்றே, நிர்வாகம் வேடிக்கைதான் பார்க்க முடியும்!

Comments