சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அமல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அமல்

சென்னை, ஏப். 12- கரோனா பரவல் அதிகரிப்பு காரண மாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண் டும் --பாஸ் முறை அமல் படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன் னாட்டு முனையத்தில் ஏற் கெனவே --பாஸ் முறை அமலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு முனையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து வருப வர்களுக்கு மட்டுமே -பாஸ் அமல்படுத்தப்பட்டது. எனினும் விமான நிலையம் வரும் வெளிமாநில பயணிக ளிடம் யாரும் --பாசை பரிசோதிக்க வில்லை. --பாஸ்களை மாநில வருவாய் துறையினர்தான் சோதனை நடத்த வேண்டும். ஆனால் அவர்கள், தேர்தல் பணியில் தீவிரமாக இருந்ததால் விமான நிலையம் வரவில்லை என விமான நிலைய அதி காரிகள் தெரிவித்தனர். இத னால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத் தில் வெளிமாநில பயணிகள் பலர் கடந்த 3 மாதங்களுக்கு மேல் -பாஸ் இல்லாமலே பயணித்து வந்தனா.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கரோனா தொற்று வேகமாக அதிக ரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக அதிக அளவில் கரோனா பரவி வரு கிறது. இதையடுத்து தமிழக அரசு நேற்று முன்தினம் (10.4.2021) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. அதில் முக்கியமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் -பாஸ் முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று கூறி உள்ளது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (10.4.2021) முதல் -பாஸ் முறை மீண்டும் அம லுக்கு வந்துள்ளது. இதில் கரு நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் -பாஸ்சில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment