உர விலையை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

உர விலையை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

சென்னை, ஏப்.13  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் நேற்று (12.4.2021) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டு மென்று கடந்த நான்கரை மாதங்களுக்கு மேல் டில்லியில் விவசாயிகள் லட்சக் கணக்கில் திரண்டு போராடி வருகின் றனர். அதை கண்டுகொள்ளாத மத்திய அரசு உரங்களுக்கான மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொண்டு வருகிறது. அதனால் உரங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.1200க்கு விற்ற 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை டி..பி. உரம் தற்போது ரூ.1900 ஆக விலை உயர்ந்துள்ளது. இதேபோல் 20.20 ரக காம்ப்ளக்ஸ் உரங்கள் ரூ.900 விற்றது. தற்போது அதன் விலை ரூ.1350 ஆக உயர்ந்துள்ளது. இப்படி பல ரக உரங் களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உர விலை உயர்வினால் தானியங்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தவறினால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பெரும் போராட் டங்களை நடத்துவோம் என்று எச் சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

 

இதன் பெயர் தான்

டேக் அண்ட் கிவ் பாலிசியோ?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் 2020-ஆம் ஆண்டு செப் டம்பரில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட யாருமே குற்றவாளியில்லை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற  நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் ஓய்வு பெற்ற பிறகு உத்தரப்பிரதேச லோக்காயுக்தாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.

லோக் ஆயுக்தா ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். இது முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் செய்தால் அவர்களை விசாரணை செய்து தண்டனை வழங்கும்

 

டில்லி உயர்நீதிமன்றத்தில்

3 நீதிபதிகளுக்கு

கரோனா தொற்று பாதிப்பு

புதுடில்லி,ஏப்.13- டில்லியில் கரோ னாவின் 2ஆவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு 11.4.2021 ஒரே நாளில் மட்டும் 10,774 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இது மாநிலம் அதுவரை காணாத அளவாகும். இவ்வாறு தீவிர தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் டில்லி உயர்நீதிமன் றத்திலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அங்கு பணியாற்றும் 3 நீதிபதிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. எனவே அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நீதிமன்ற நடவடிக்கை  களிலும் ஈடுபடவில்லை. அவர்களது உடல் நிலை தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. டில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மேலும் ஒரு நீதிபதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே அவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு இருக்கிறது. அதன் முடி வுக்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

No comments:

Post a Comment