அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கிறது அவமதிப்பு

கிருட்டினகிரி, ஏப். 13 கிருட்டினகிரியில் சுவரில் வரையப்பட்ட பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

கிருட்டினகிரி மாவட்டம் மோட்டூர் என்ற இடத்தில் அம்பேத்கர் குடியிருப்புப் பகுதியில் மின்மோட்டார் அறையின் வெளிப்புற சுவரில் பெரியார், அம்பேத்கர் படங்கள் வரையப்பட் டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளில் அந்த பகுதியில் விழா கொண்டாடுவது வழக்கம். நாளை (14.04.2021) இந்த ஆண்டிற்கான அம்பேத்கர் பிறந்தநாள் கொண் டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காகப் புது ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சில நபர்கள்  சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர் ஓவியங்களின் மீது சாணி ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ந்த மக்கள் காவல்துறையிடம் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் அங்கு வந்து இந்த அவமதிப்பு செயலில் ஈடுபட்ட  நபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments