விண்ணில் தயாராகும் செயற்கைக் கோள்

விண்வெளியில் இருந்தபடி, பூமியை சுற்றி வருபவை செயற்கைக் கோள்கள். அவற்றை, அதே விண்வெளியில், பூமியைச் சுற்றி வரும் ஒரு தொழிற் சாலையில் வைத்து தயாரிக்க முடியுமா என்று அய்ரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதற்கான மாதிரி தொழிற்சாலையை, சிறிய அளவில் விண் வெளியில் செய்து பார்க்கும் பொறுப்பை, 'ஏர்பஸ்' நிறுவனம் ஏற்றுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், விண்வெளியில் தனியார் கூட்டுறவை நாட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், செயற்கைக் கோள்களை ராக்கெட் மூலம் அதிக செலவில் ஏவுவதற்கு பதில், விண் வெளியில் ஆலையை நிறுவி, அங்கி ருந்தே ரோபோக்கள் மூலம் தயாரித்து விண்வெளிப் பாதையில் ஏவிவிட திட்டமிடுகிறது அய்ரோப்பிய விண்வெளி அமைப்பு.

தனியார் விமான தயாரிப்பாளரான ஏர்பஸ், இந்த சோதனைக்காக, 35 லட்சம் டாலர்கள் நிதியையும் அண்மையில் பெற்றுள்ளது.

ராக்கெட் செலவை குறைத்து, ரோபோக்கள் மூலம் செயற்கைக் கோளை, 'அசெம்பிள்' செய்து, ஏவும் உத்தி நடைமுறைக்கு வந்தால், எலான் மஸ்க் நடத்தும், 'ஸ்பேஸ் எக்'சின் கதி அவ்வளவு தான்!

Comments