ஆரோக்கியம் தரும் "ஒலி"கள்

நகர்ப்புற ஒலிமாசு, மனிதனின் மன நலம் மற்றும் உடல் நலனை பாதிக்கிறது. இதற்கு மாற்றாக, அடர்வன பகுதிகளில் எழும் இயற்கை ஒலிகள் மனதிற்கும், உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கனடாவிலுள்ள கார்ல்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள், கானக ஒலிகள் குறித்து, 11 நாடுகளில் நடத்தப்பட்ட, 36 ஆய்வுகளை தொகுத்து ஆராய்ந்தனர். இதன் முடிவில், இயற்கை ஒலிகளைக் கேட்பவர்களுக்கு மனநிலை மேம்படுவது, மூளையின் ஆக்கப்பூர்வ திறன் உயர்வது, நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பது, மனச் சுமை தணிவது, பதற்றம் மற்றும் எரிச்சல் குறைவது போன்ற நல்ல பலன்கள் கிடைப்பது தெரியவந்துள்ளது.

மேலும், எழும் வெவ்வேறு ஒலிகள், வெவ்வேறு பலன்களைத் தருவதையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உதாரணமாக, நீர் வீழ்ச்சி, நீரோடை போன்றவை எழுப்பும் இனிய ஓசைகள் எதிர்மறை எண்ணங்களை ஊக்குவிக் கின்றன. உடல் நலத்தையும் அதிகரிக் கின்றன. அடர்வனத்தில் பறவைகள் எழுப் பும் கூக்குரல்களைக் கேட்பவர்களுக்கு, மனச்சுமைகள் மற்றும் கவலைகள் கரைந்து போகின்றன.

நகர்ப்புறத்தை தாண்டாமல் வசிப் போருக்கு, அவ்வப்போது வன உலா போவது, அல்லது நகரத்தில் அடர் மரங்கள், செடிகள் உள்ள பகுதிகளில் நடை பயில்வது போன்றவை நல்ல பலன் தரும் என, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Comments