வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை, ஏப். 8- வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் என்பதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சத வீதம் என்பதிலேயே நீடிக்கிறது.

மும்பையில் இருந்து காணொலி வாயிலாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக தொடரும் என்றும் இதனால்  வீடு,வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாகவே தொடரும் என்றும் கூறினார். 2021-2022ஆம் நிதியாண்டிற் கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்றும் ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 26.2 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.3 சதவீதமாகவும், அக்டோபர் -- டிசம்பர் காலாண்டில் 5.4 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.2 சத வீதமாகவும் வளர்ச்சி இருக் கும் என்று மதிப்பிடப்பட் டுள்ளது. சந்தைகளில் போது மான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நட வடிக்கை எடுக்கும். மேலும் கரோனா அதிகரிப்பால் மாநில  அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் உள் நாட்டு வளர்ச்சியில் மாற்ற மிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ராய்டர்ஸ் நிறுவனம் சார்பாக நடத்தப் பட்ட ஆய்விலும் ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று வல் லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோலவே இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகி தத்தில் மாற்றம் செய்யாமல் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image