காரில் தனியாக சென்றாலும் முகக்கவசம் அவசியம் டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஏப். 8 டில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரவு நேர ஊர டங்குஅமல்படுத்தப்பட் டுள்ள நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வருகி றது. இதனால் கரோனா வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கேட் டுக்கொண்டுள்ளது. அதை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

காரில் தனியாக சென்ற சில நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு பேர் இந்த நடைமுறைக்கு எதிராக டில்லி உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது வழக்கை விசா ரித்த டில்லி உயர்நீதிமன்றம் ‘‘காரை தனியாக ஓட்டிச் சென்றாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம். முகக் கவசச் சட்டம் கரோனா பர வலை கண்டிப்பாக தடுக்கும். பொது இடம் என்பதால், காரில் ஒருவர் இருந்தாலும் கூட முகக்கவசம் அணிய வேண்டும்’’ எனத் தெரிவித்து உள்ளது,

Comments