மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்!

 மாவோயிஸ்ட்டுகள் அறிவிப்பு

சுக்மா, ஏப். 8- மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மாவோயிஸ்ட்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் பல பகுதிகளில் மாவோயிஸ்ட்டு கள் ஆதிக்கம் உள்ளது.   இங்கு ஜார்குண்டா - ஜானகுடா பகுதியில் இவர்களின் முக்கிய தலைவர்களான மாத்வி ஹித்மா, சுஜாதா உள்ளிட் டோர் பதுங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை யொட்டி இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மத்திய மாநில பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத் தியதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.  இதில் பாது காப்புப் படையினர் தீவிரமா கப் போராடியும் 22 பேர் உயிர் இழந்துள்ளனர்.  ஒரு வீரர் மாவோயிஸ்ட்டுகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதா கத் தகவல்கள் தெரிவிக்கின் றன.  இந்த தகவல் நாடெங்கும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அருகே பீஜாப் பூரில் நடந்த என்கவுன்டரில் 24 வீரர்கள் இறந்தனர். மேலும் 31 பேர் காயம் அடைந்தனர். வீரர்களில் ஒருவர் எங்களது சிறைக்காவலில் உள்ளார். நாங்கள் சிறைபிடித்துள்ள ஒரு வீரரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக் குத் தயார்.

இந்த பேச்சுவார்த்தைக் கான நடுநிலையாளர்களை மத்திய அரசு நியமிக்க வேண் டும்.  எங்களுக்கு என்றுமே காவல் துறையினரும், பாது காப்புப் படையினரும் எதிரி கள் அல்ல.  எங்கள் தரப்பில் இருந்தும் பாதுகாப்புப் படை யினருடன் சண்டையில் 4 பேர் இறந்துள்ளனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments