அணிவகுப்பு, ஆயுதப் பயிற்சி அளிக்கக் கூடாது கேரள கோயில்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தடை

 தேவசம் போர்டு அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம், ஏப். 4- கேரளா வில் தனது கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோயில்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்புகள் நடத்தவும், ஆயுதப்பயிற்சிகள் அளிக்கவும் தடைவிதித்து திருவாங்கூர் தேவசம் போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் சில கோயில் களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தினர் அணிவகுப்பு, ஊர்வலம் போன்றவற்றை நடத்துகின்ற னர். மேலும், அப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆயுதப் பயிற்சியும் அளித்து வருகின் றனர். இதை தடுத்து நிறுத்தும் படி அரசிடம் புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் படி தேவசம் போர்டுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், தனது கட் டுப்பாட்டில் உள்ள சபரி மலை உள்ளிட்ட அனைத்து கோயில்களின் நிர்வாகிகளுக் கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் பிறப் பித்துள்ள உத்தரவில், ‘திரு விதாங்கூர் தேவசம் போர் டின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் செயல்பாடு கள் நடந்து வருகின்றன.

இது தவிர அணிவகுப்பு நடத்தப்படுவதாகவுடும், ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவ தாகவும் தெரிகிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு கோயில் நிர்வாக அதிகாரிகள் இனிமேல் அனுமதி அளிக்கக் கூடாது. ஆயுதங்களை பயன் படுத்தி எந்த பயிற்சி அளிக்க வும், கோயிலுக்கு சொந்த மான பொருட்களை பயன் படுத்தவும்ஆர்.எஸ்.எஸ். சுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மீறினால், கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. தேவசம் போர் டின் இந்த உத்தரவு, கேரளா வில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

Comments