முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வில் மாணவி தேர்ச்சி

வல்லம், ஏப்.3 ஜாம் (JAM) எனப்படும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வில் (Joint Admissions test for Master's) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி எஸ்.என்..குழலி தேர்ச்சி பெற்றுள்ளார் .

எம்.எஸ்சி, முனைவர் பட்ட ஆய்வுடன் இணைந்த எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் சேர ஜாம் (JAM) எனப்படும் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், இத்தேர்வினை நடத்தியது.

இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 14, 298 மாணவர்கள் தேர்வில் பங்கு பெற்றார்கள்; அவர்களுள் மாணவி குழலி இந்திய அளவில் 3107ஆவது இடம்பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இம்மாணவியை பல்கலைக்கழக துணைவேந்தர், இணை துணை வேந்தர், புல முதல்வர்கள், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

Comments