மைக்ரோஸ்கோப் மூலம் துல்லியமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

சென்னை, ஏப்.3 சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றான வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில்,   நுண்ணோக்கி ஒன்றின் கீழ், மிக நுட்பமான செயல்முறையின்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது

இந்த அறுவை சிகிச்சைக்கு தலைமையேற்று, வெற்றிகரமாகச் செய்து முடித்த சிம்ஸ் மருத்துவமனையின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் எஸ். விவேகானந்தன், இந்த சிகிச்சை பற்றி தனது அனுபவங்களையும், இச்சிகிச்சையால் நோயாளிக்கு ஏற்படும் பலன்கள் குறித்தும் பேசுகையில், கடந்த பலகாலமாக இதுபோன்ற அறுவை சிகிச்சைகள், ஒரு பொருளைப் பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடி லென்சுகளின் வழியாகப் பார்த்து மேற்கொள்ளப் பட்டன. 

இதன்வழி பார்க்கும்போது, தசைநார் மற்றும் இரத்த நாளங்கள் பெரிதாக்கிக் காட்டப்படுகின்றன. ஆனால், சிம்ஸ் மருத்துவமனையில் தற்போது நாங்கள் பயன்படுத்தும் செயல்படும் நுண்ணோக்கியின் கீழ், இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம். இது, தமிழகத் திலேயே முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments