தமிழ்நாடு சாதாரண மண் அல்ல, அயோத்தியதாச பண்டிதர், தந்தை பெரியார், சிங்காரவேலர் பிறந்த சமூக சீர்திருத்த மண் - இங்கு பா.ஜ.க. காலூன்ற முடியாது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எச்சரிக்கை

திருப்பூர்,ஏப்.3- தமிழ்நாடு சாதாரண மண் அல்ல. அயோத்தியதாச பண்டிதர், தந்தை பெரியார், சிங்கார வேலர் பிறந்த சமூக சீர்திருத்த மண். இங்கு பா... காலூன்ற முடியாது என்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டிராஜா குறிப்பிட்டார்.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் கதிர் அரிவாள் சின்னத் தில்  போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி () சுப்பிர மணியன் அவர்களையும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்களையும் ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 31.3.2021 அன்று இரவு 8 மணியளவில் திருப்பூர் கொங்கு நகர் மெயின் ரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப்பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா பேசியதாவது;

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிஜேபி தலைவர்கள் படை யெடுத்து வருவதற்கு என்ன காரணம்? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் அச்சமெல்லாம் பிஜேபி ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் தொடக்கமாக இருக்கப் போகிறது என்பதுதான்.

மக்களை பிளவுபடுத்தி

பிஜேபி மக்களுக்கு எதிரான கட்சியாக,ஆர்.எஸ்.எஸ். என்கிற பாசிச அமைப்பின் அரசியல் பிரிவாக செயல் பட்டு வருகிறது. மதம்,ஜாதி, மொழி, கலாச்சாரம் மற்றும் கடவுள் ஆகிய வற்றின் பெயரால் மக்களை பிளவு படுத்தி,ஆர்எஸ்எஸ்,பிஜேபி மோதலை ஏற்படுத்தி வருகிறார்கள்.

முஸ்லீம் மற்றும் கிறிஸ்த்தவர்கள் இவர்களால் இலக்கு வைத்து தாக்கி கொல்லப்படுகிறார்கள். பி.ஜே.பி.யின் பொருளா தாரக் கொள்கை மக்களுக்கு விரோதமாகவும், நாட்டு நலனுக்கு எதிராகவும் இருந்து வருகிறது.

திருப்பூரில் சிறு,குறு தொழில்கள் நொடித்துவிட்டது. வேவையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது.வியாபாரிகள் மூலதனமின்றி தொழில் நடத்த இயலாத கொடுமைக்கு ஆளாகி யுள்ளனர். அனைத்து இடங்களிலும் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.

பொருளாதார வீழ்ச்சி

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்தியா வளர்ச்சியில் நிற்பதாக மோடி உரை நிகழ்த்துகிறார்.பணமதிப்பிழப்பால் உழைக்கும் மக்கள்,சிறு,குறு தொழில் நடத்து பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஆர்எஸ்எஸ் கொள்கை அடிப்படையில் அமல் படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, மாநிலங்களின் உரிமைகளை பறித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. விமானம், ரயில்வே, அணு மின்சார உற்பத்தி, விண்வெளி ஆராய்ச்சி  ஆகிய துறைகளில் தனியார் பங்கு பெறலாம் என்கிறார் மோடி.

இந்திய வளங்கள் பெரு முதலாளி களிடம் ஒப்படைக்கப்பட பணி யாற்றும் அரசாக மோடி அரசு செயல் படுகிறது.

மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அய்.நா.வில் சர்வதேச சமுதாயத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக வெளிநடப்பு செய்து குற்றத்துக்கு துணை போயுள்ளது.

மோடி அரசு விவசாயிகளை புறக்கணிக்கும் விதமாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.இதை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழு வதும் குடும்பம், குடும்பமாக போ ராட்டம் நடைபெற்றது.இன்றுவரை போராட்டம் தொடர்ந்து வருகிறது. மாநில அரசை கேட்காமல் எதேச் சதிகாரத்தோடு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்த்தன. ஆனால் விவசாயி என்று தன்னை கூறிக்கொள்கின்ற எடப்பாடி பழனி சாமிக்கு இந்த சட்டத்தை எதிர்க்க துணிச்சல் வராதது ஏன்?

காவி மயம் - தனியார் மயம்

கல்வியை காவிமயம், தனியார்மயம், வாணிபமயம் ஆகியவைகளுக்கு தாரை வார்க்கும் வகையில் புதியகல்விக் கொள்கையை மோடி அரசு அமல் படுத்துகிறது. இந்தி,சமஸ்கிருதத்தை திணிப்பது தான் இந்த புதிய கல்விக் கொள்கையின் கொள்கை. தமிழ் நாட்டில் அமலிலுள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக் காமல் எங்கே போனார்?

எடப்பாடி அரசு மத்திய அரசோடு உறவு பூண்டு தமிழகத்தை பாழ்படுத்திவிட்டது. தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமிக்கதாக இருக்கவேண்டும். திமுக கொள்கை பலத்தோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக் கிறது. ஜனநாயகம், இந்தியா, தமிழ்நாடு, இந்திய அரசியல் சட்டம் ஆகியவைகள் காப்பாற்றப்பட பிஜேபி.க்கு மரண அடியை வெகுமக்கள் தரவேண்டும். தமிழ்நாடு அயோத்தியதாச பண்டிதர், தந்தை பெரியார், சிங்காரவேலர் பிறந்த சமூக சீர்திருத்த மண். இங்கு பிஜேபி காலூன்ற முடியாது என்ற முடிவை மோடிக்கு தெரிவிக்கவேண்டும். நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் மாற்றம் இந்தியாவிற்கே வழிகாட்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணிக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Comments