தந்தை பெரியாரா - பா.ஜ.க.வா? தந்தை பெரியாரா - மோடியா? முடிவு செய்வீர்!

 தமிழர் தலைவர்  ஆசிரியர் அறிக்கை

பா... இளைஞரணி தேசிய தலைவரும், கருநாடகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா என்பவர் - ‘‘பெரியாரின் கொள்கைகளை ஒழிப்பதற் காகவே பா... தமிழகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது'' என்று கோவையில் பேசி யுள்ளார்.

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது-

தமிழர்களே, தமிழர்களே, சிந்திப்பீர்!

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, சமதர்மம், சமத்துவம், பெண்ணுரிமை, தீண்டாமை- ஜாதி ஒழிப்பு, இனநலம், மொழி உரிமை - தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக 95 வயதிலும் உழைத்த ஒப்பற்ற தலைவர் - கட்சி, மதம், ஜாதி அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் - இன்னும் சொல்லப்போனால், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நீதிபதி யால் ‘‘தமிழ்நாட்டின் தந்தை என்று மதிக்கத் தகுந்த தலைவர் தந்தை பெரியார்'' என்று போற்றப்பட்டவர்; நாடாளுமன்றத்திலேயே ‘‘தந்தை பெரியார் வாழ்க!'' என்று முழங்கிப் பதவிப் பிரமாணம் எடுக்கும் அளவுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான தந்தை பெரியார் கொள்கைகளை ஒழிக்கவே பா... தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத் துள்ளதாம்;

தந்தை பெரியாரா - பா...வா?

தந்தை பெரியாரா - மோடியா?

நேரடியாகவே களத்துக்கு வந்துவிட்டனர்.

தமிழர்களே, நாம் யார் என்று காட்ட வேண்டாமா?

தமிழ் மண் எத்தகையது என்பதை நிரூபிக்க வேண்டாமா?

அரிய சந்தர்ப்பம்! தந்தை பெரியாரே, நமது பேராயுதம்!

சரியான தருணம் இது - முடிவு செய்வீர், தமிழர்களே!


 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை                                     

5.4.2021              

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image