பொய் மூட்டைகளையும் - பண மூட்டைகளையும் கண்டு ஏமாறாதீர்!

வாக்காளப் பெருமக்களே, உஷார்! உஷார்!!

அருமைத் தமிழ்க்குடி வாக்காளப் பெருமக்களேநாளை (ஏப்ரல் 6) தமிழ்நாட்டின் எதிர்காலத்தை - ஏன் உங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தை எண்ணி எண்ணிப் பார்த்து - தி.மு.. கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி வாகை சூடச் செய்வீர்! விடிவுக்கு அதுதான் ஒரே வழி!

அண்ணாவின் பெயரைச் சொல்லி, ‘திராவிட' என்னும் உயரிய பண்பாட்டு மரபின் பெயரையும் இணைத்துக்கொண்டு அகில இந்திய (.தி.மு..) என்பதையும் ஒட்டிக்கொண்டு, திராவிட இயக் கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான சுய மரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவம், இன நலம்,  பாலியல் சமத்துவம், மண்ணுரிமைகளை யெல்லாம் - பாசிச பாஜ..வின் காலடியில் புதைத்து, 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை டில்லிக்கு அடகு வைத்து குட்டிச்சுவராக்கிய துரோகக் கூட்டத்திற்கு இத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவீர்!

நூறாண்டு காலம் உழைத்து உருவாக்கிய திராவிட இயக்கம் பெற்றுத் தந்த சமூகநீதிக்குச் சாவுமணி அடிக்கும் - பாலியல் சமத்துவம், சகோத ரத்துவத்துடன் - நேச மனப்பான்மையுடன் ஒருவருக் கொருவர் பழகிவரும் தமிழ் மண்ணில் மதவெறி-ஜாதி வெறியைத் தீயாக மூட்டி அமைதியைக் குலைக்கும் பாசிச பா...வை அனுமதிக்கலாமா? அதற்கு அடிவருடியாகத் துணைப் போகும் .. .தி.மு..வைத்தான் மன்னிக்கலாமா?

பண மூட்டை, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியைத் தடுக் கும் வகையில் ‘‘கண்ணிவெடி'' வைத்து நம்மைத் தரைமட்டமாக்கும் கூட்டத்திற்குத் தக்க தோர் பாடம் கற்பிக்கும் நாள்தான் ஏப்ரல் 6 - மறவாதீர்! தி.மு.. கூட்டணியின் வெற்றி தான் இந்த நச்சுக் கிருமிகளை அழிக்கும் தடுப்பூசி.

கொஞ்சம் அயர்ந்தால் அரும்பாடுபட்டு பாது காத்து வைத்த நம் சமூகநீதி, மண்ணின் உரிமைச் செல்வங்கள் எல்லாம் கொள்ளை போய்விடும் - பறி முதல் செய்யப்பட்டு விடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தி.மு.. கூட்டணியை எதிர்ப்போர் யார்?

அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்தது என்ன? நிகழ்ந்த அட்டூழியங்கள் என்ன -  அடிபணிந்து போனதென்ன? ஏற்பட்ட இழப்புகள் என்ன, என்ன? என்பதை ஒருகணம் சிந்தித்து - அடுத்த தலை முறை களின் நல் வாழ்வை - அவர்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.. கூட்டணிக்கு வாக்களித்து வரலாறு காணாத வெற்றியைத் தாரீர்! தாரீர்!!

அதன்மூலம் உங்களின் வாழ்வு நலம் பெற - வளம் பெற வழிவகைக் காண்பீர்!

பா... - .தி.மு.. ‘மயக்க பிஸ்கெட்டுகள்' - கவனம், கவனம்!

உரிமையைப் பயன்படுத்தி, வளமான எதிர் காலத்திற்கு வாக்கின்மூலம் வகை செய்வீர்!


 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

5.4.2021                            

Comments