தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பகல் ஒரு மணி நிலவரம்!

சென்னை, ஏப்.6 தமிழக சட்டமன்றத் தேர்தலு(2021)க்கான வாக்குப்பதிவு இன்று (6.4.2021) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் கடைசி கட்டமாக இன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக வாக்குச்சாவடிகளில் கையுறைகள், முகக்கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 96 ஆயிரத்து 440 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் பெண்கள்; 7,192 பேர் 3 ஆம் பாலினத்தவர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Comments