கரோனா, வேலையின்மை அதிகரிப்பு பிரதமர்மீது ராகுல் காந்தி புகார்

புதுடில்லி,ஏப்.12- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (11.4.2021) சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. அதேநேரத்தில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்த்து வைக்கவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அபாயத்தில் உள்ளன. நடுத்தர குடும்பத்தினர் திருப்தியாக இல்லை. ஆனால், பிரதமர் மோடி மாம்பழம் பிடிக்கும் என்று கூறுகிறார். மாம்பழத்தை விரும்புவது நல்லதுதான். அதேவேளையில் சாதாரண மக்களை கவனிக்காமல் இருப்பது ஏன்? மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு உதவும் வகையில் அவர்களுடைய கைகளுக்கு நேரடியாக பணம் சேரும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Comments