தமிழ்நாட்டில் விதவிதமான அவமானங்களை மோடி சந்திப்பதற்கு முக்கிய காரணம் என்ன?

இந்தியாவிலேயே, எங்கு மில்லாத வகையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அவமானங்களை சந்திப்பது பிரதமர் மோடியின் வழக்கம்தான்! அது அவருக்கும் பழகிவிட்டது என்று நினைக்கும் வகையில்தான் அவரும் நடந்து கொள்கிறார்.

ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி, அவர் சந்தித்த ஒரு புதுவிதமான அவமானம் வேறு லெவல்!

திமுகவின் பல வேட் பாளர்கள், நாங்கள் எனது தொகுதியில் வந்து, அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், எனது வெற்றி வித்தி யாசத்தை இன்னும் அதிகரித்து கொள்ள, பெரிய உதவியாக இருக்கும்" என்று அழைப்புவிடும் அளவிற்கு நிலைமை சென்றது.

உண்மையில், இதுவெல்லாம் புதுவித கிண்டல்தான்! ஆனால், இதையும் மோடி கடந்து சென்று கொண்டுள்ளார்.

இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை நிலவுவதற்கு, பெரியாரிய-அம்பேத்கரிய பிரச்சார அரசியல் மிக முக்கிய காரணம் என்பதை குறைந்தபட்ச நியாயம் உள்ள வர்கள் எவரும் மறுத்துவிட முடியாது.

இதைத்தான் சில இடதுசாரி சார்பு இயக்கங்களும் உரிமை கொண்டாடுகின்றன. திராவிடர் கழகம்,  மே 17 இயக்கம், தன்னாட்சி தமிழகம், மக்கள் மன்றம் உள் ளிட்ட பல்வேறு அமைப் பினர், தாங்கள், இந்த தமிழ் சமூகத்தில், மோடி எதிர்ப்பை பெரியளவில், தொடர்ச்சியாய் முன்னெடுத்துச் செல்வதாய் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் சொல்வதை யாரும் நிச்சயம் மறுக்க முடியாது. ஏனெ னில், பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரிய சித்தாந்த அடிப் படையில் இயங்கும் இத்தகைய அமைப்புகளுக்கு, மோடி மற்றும் பாஜக எதிர்ப்பைவிட, பிரதானப் பணி என்று எதுவும் இருக்க முடியாதுதான்.

அந்தவகையில், தமிழ்நாட்டில், நரேந்திர மோடி எதிர்கொள்ளும் விதவிதமான அவமானங்களுக்கு, தேர்தல் அரசியல் கட்சிகளைவிட, இத்தகைய இயக்கங்களே முக்கிய காரணம் என்று சொன்னால், அதில் பெரிய பிழை எதுவும் இருக்கப்போவதில்லை..!

ஏனெனில், தமிழ்நாட்டிற்கு மோடி எதுவும் செய்யாத காரணத்தால்தான் அவர்மீது இத்தனை வெறுப்புணர்வு என்று யாரேனும் சொன்னால், மோடி, எந்த மாநிலத்திற்கு எந்த நன்மையை செய்தார்?  என்று அந்த அந்த மாநிலத்து மக்களைக் கேட்டாலே அவர்கள் பதில் சொல்லிவிடுவார்கள்.


Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image