அந்தோ, தருமபுரி கழகப் புரவலர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு அய்யா சின்னராசு காலமானார் நமது வீர வணக்கம்!

தருமபுரி நகரத்தின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், உழைப்பால் உயர்ந்த உத்தமரும், தீவிர பெரியார் பற்றாளரும், தரும புரிவிடுதலை' வாசகர்  வட்டத் தலைவரும், கழகத்தின் காப்பாளரு மாகிய அய்யா மானமிகு சின்னராசு (வயது 87) அவர்கள் இன்று (7.4.2021) காலமானார் என்ற செய்தி கேட்க அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்!

பல ஆண்டுகளாகவே தீவிர கொள்கைக்காரரான இவர், நம்மிடமும், கழகத்திடமும் நீங்காத பற்று கொண்டவர்; ‘விடுதலை' உள்ளிட்ட கழக ஏடுகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய கொடை வள்ளல்.

இவரது எளிமையும், கொள்கை உறுதியும், வியத்தற்குரிய ஒன்று. எனது நலம்பற்றி மிகவும் கவலையோடு எப்போதும் விசாரிப்பவர்.

இவரது தொண்டறத்தைப் பெருமைப்படுத்தவே வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் அவர் பெயரையும், அவரது மகன் ஆசைத் தம்பி அவர்களது பெயரையும் இணைத்து ஒரு கட்டடத்திற்குப் பெயர் வைத்துள்ளோம்.

அவரது மறைவு நமக்கும், நம் இயக்கத்திற்கும், தருமபுரி கழகக் குடும்பத்தவர்களுக்கும், அவரது குடும்பத்தவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் - வருந்தும் - அவரது குடும்பத்தவருக்கும், தோழர்களுக்கும், நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

அவருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி

தலைவர் , 

திராவிடர் கழகம்

சென்னை

7.4.2021           

குறிப்பு: கழக அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் தலைமையில் குடும்பத்தினரோடு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image