தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் இல்லை

பெங்களூரு, ஏப்.7 தமிழ் நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை  என்ற சான்றிதழ் கட் டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கவுரவ் குப்தா கூறினார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கவுரவ்குப்தா பெங்களூருவில் நேற்று, விக்டோரியா மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அங்கு  கரோனா தடுப்பூசி போடும் பணி குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

மேலும் நகரில் கரோனா தடுப்பூசி போடும் மய்யங் களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி மய்யங்களை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

கரோனா தடுப்பு விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கூடுதலாக ஊர்க் காவல் படையினரும் நியமிக்கப்படு கிறார்கள். இதற்கு காவல்துறையின் ஒப்புதலை பெற்றுள்ளோம்.

அரசின் வழிகாட்டுதல்படி மராட் டியம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூ ருவுக்கு வருபவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும்.

தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. பெங்களூரு மாநக ராட்சியில் 8 மண்டலங்களிலும் தலா ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப் படும். அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

200 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனை களில் 20 சதவீத படுக்கை களை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசு கூறியுள் ளது. விரைவில் அந்த மருத்துவ மனை நிர்வாகங் களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image