சிங்கப்பூர் பேராசிரியர் ரத்னகுமாரின் மாமியார் அன்னபூரணம் பொன்னுத்துரை மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் மானமிகு ரத்னகுமார் அவர்களது மாமியாரும், சிங்கப்பூரின் ஓய்வு பெற்ற கல்வித்துறை அதி காரியும், திருமதி வத்சலா ரத்னகுமார் அவர்களின் அன்னையுமான  திருமதி அன்னபூரணம் பொன்னுத்துரை  (வயது 91) அவர்கள் மறைந்தார் (கடந்த மார்ச் 25, 2021 அன்று) என்பதை அறிய மிகவும் வருந்துகிறோம்.

மறைந்த அம்மையார் நான் பேசிடும் கூட்டங்களுக்குத் தவறாது வருவார். நமது குடும்பத்துடன் மிகுந்த நட்பு பாராட்டத்தவறாதவர்.

அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,              

திராவிடர் கழகம்     

6-4-2021              

Comments