மானமிகு தோழர் கு. காந்தீசுவரனுக்கு நமது வீர வணக்கம்!

முதுபெரும்  பெரியார் பெருந் தொண்டரும், திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவருமான தோழர் மானமிகு

கு. காந்தீசுவரன் (வயது 89) இன்று  (6.4.2021) காலை மறைந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையும், துயரமும் அடைந்தோம்.

அவர் இராமநாதபுரத்தில் வசித்த  காலத்திலிருந்தே தந்தை பெரியார் மீதும், கழகத்தின் மீதும், நம்மீதும் நீங்கா அன்பும், பற்றும், மரியாதையும் உடைய சீரிய கொள்கையாளர். ஒரே கால கட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டம் - தஞ்சை மாவட்டங்களுக்கு கழகப் பொருளாளராக இருந்த பெருமைக்குரியவர் ஆவார்.

திருத்துறைப்பூண்டியில் ராஜகுரு டிம்பர் டிப்போ உரிமையாளரான நிலையில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டங்களில் இயக்கப் பணியில் முழு ஈடுபாடு கொண்டு உழைத்தவர். 'விடுதலை'யின் நீண்ட காலத் தொடர் வாசகர். பான்மையுடன் பழகக் கூடியவர்.

அவரது மறைவால் வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், கொள்கை உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் காந்தீசுவரனுக்கு நமது வீர வணக்கம்!

 

 

சென்னை       தலைவர்,

6-4-2021              திராவிடர் கழகம்   

குறிப்பு:  மறைந்த காந்தீசுவரன் அவர்களின் மகன் பாஸ்கரன் அவர்களுடன் கழகத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்.

Comments