அதானி வளர்ச்சி கேரளாவிற்கு தேவையில்லை

கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் சிறீதரன், கேரளாவில் இடதுசாரி களும் & காங்கிரசும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் வளர்ச்சி ஏற்படவில்லை என்கிறார். அவருக்காக சில - கேரள முதல்வர் பினராய் விஜயன் எவ்வளவோ கேட்டும், பிரதமர் மோடி கொடுக்காமல், அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகன நிறுத்தும் கட்ட ணத்தை அதிகரித்துள்ளனர்.

அதிகமாக அல்ல..,!

முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத் திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்.

உதாரணமாக மூன்று மணிநேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே. அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...

இது யாருக்கான வளர்ச்சி - அதானி வளர்ச்சி கேரளாவிற்கு தேவையில்லை திரு மெட்ரோமேன்!

ரோசம் உள்ள பா... ஆளுநர், பா... எம்.எல்.

என்னை பதவியில் இருந்து நீக்கினாலும் தலைநகர் டில்லியில் நான்கு மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் - மேகாலயா ஆளுநர் மாலிக்.

ஒடிசா சட்டமன்றத்தில் சுபாஷ் சந்திர பானி கிராகி என்ற பாஜக எம்.எல்.., தலைநகர் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விஷமருந்தி தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

பா...வை சேர்ந்தவர்களுக்கே ரோஷம் இருக்கும்போது விவசாயி வேடம் போட்டு ஏமாற்றும் எடப்பாடிக்கு எள்ளளவும் வெட்க மில்லையே ஏன்?

அன்புமணி அன்றும் இன்றும்

முதல்வர் எடப்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கூட லாயக்கு இல்லை - இது அன்று

எடப்பாடி தமிழக முதல்வர் என்பது நமக்கு மகிழ்ச்சி - இது இன்று

எடப்பாடி முதல்வராக இருப்பது நமது தலை யெழுத்து - இது அன்று

எடப்பாடிக்கு நிர்வாகம்னா என்னன்னு தெரியுமா? அல்லது நம்ம நிதியமைச்சர் .பி.எஸ்.க்கு நிதின்னா என்னன்னு தெரியுமா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பானாம் என்பதைப் போல உள்ளது இவர்களது செயல்பாடு - இது அன்று

முதல்வர் எடப்பாடி மக்களுக்காக எத்த னையோ நல்ல பல திட்டங்களை அறிவித் திருக்கிறார் -  இது இன்று

நன்றி: ஜனசக்தி , மார்ச் 28-ஏப்.3

Comments