தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்

சிபிஅய் பொதுச் செயலாளர் டி.ராஜா

திருவில்லிபுத்தூர், ஏப்.4 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரித்து வத்திராயிருப்பில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள  அதிமுக படுதோல்வியை சந்திக்கும். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந் துள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு அணி வெற்றி பெறும்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மக்கள் விரோத கொள்கை களை பின்பற்றுகின்ற மோடி அரசிற்கு  முடிவு கட்டுவதற்கான தொடக்கமாக இந்த தேர்தல் தீர்ப்பு அமையும். தமிழக மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள்.

திமுக  கூட்டணிக்கு ஒரு பேரலை உருவாகி சாதகமாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது  என்பது மட்டுமல்ல மிக மோசமான வீழ்ச்சி பெற இருக்கிறது.

கோவையில் யோகி ஆதித்ய நாத்  நிகழ்ச்சியில் கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்தது எதிர்பார்த்த ஒன்றுதான்.யோகி ஆதித்யநாத் ஆளுகின்ற உபி மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு கலவரத்தை  தமிழகத் திலும் உருவாக்க வேண்டும் என்றுதான் பாஜக  தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள் ளார்கள்.

கோவையில் நடைபெற்ற சம்பவம் வன்மை யான கண்ட னத்துக்குரியது. வன்முறையில் ஈடுபட்ட வர்கள் பாஜகவினர். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments