புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல வராதவர்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அடிக்கக் கூடிய புயலில் காணாமல் போவார்கள்

15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வரும் என்று சொன்னாரே மோடி - நடந்ததா?

நாகப்பட்டினம், கீழ்வேளூர் தொகுதிகளில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

 நாகப்பட்டினம், ஏப்.4. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து 3.4.2021 அன்று நாகப்பட்டினம், கீழ்வேளூர் தொகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதன் விவரம் வருமாறு:

நாகப்பட்டினம் தொகுதியில் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஜெ. முகம்மது ஷா நவாஸ் அவர்களை ஆதரித்து நாகை அவுரித்திடலில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  (3.4.2021)

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஜெ.முகம்மது ஷா நவாஸ் அவர்களை ஆதரித்து நாகை அவுரித்திடலில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத் திற்கு மாவட்ட தலைவர்  வி.எஸ்.டி.. நெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா வரவேற்புரை வழங்கினார்.

நாகை நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையன், மாணவர் கழக துணை செயலாளர் நாத்திக.பொன்முடி, மண்டல இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன், திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகை மாவட்ட தி.மு..செயலாளர் பொன்.கவுதமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, தி.மு..ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நாகை நகர செயலாளர் போலீஸ் பன்னீர், ...பொறுப்பாளர் ஜபருல்லாஹ், .தி.மு..ஒன்றிய செயலாளர் அய்யா பிள்ளை, காரைக்கால் மண்டல செயலாளர் பொன்.பன்னீர் செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்ச் செல்வி,  திருவாரூர் மாவட்ட செயலாளர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந் தராசு, காரைக்கால் மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  கழகப் பொறுப்பாளர்கள் சிவானந்தம், நாத்திகன், மாவட்ட ..தலைவர் மு..ஜீவா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நமது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளக் கூடிய தேர்தல். சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி விடியலை உண்டாக்க வேண்டும் என்றால் அது இவர்களால் தான் முடியும்.

இந்த மண் சகோதரத்துவத்தை போதிக்கக் கூடிய பெரியார் மண். இந்தத் தொகுதியில் அருமையான ஓர் இளைஞரை ஷாநவாஸ் அவர்களை வி.சி..நிறுத்தியுள்ளது.

மோடி வித்தையைக் கண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கே உள்ளவர்கள் ஏமாந்தனர். தமிழ்நாடு விழிப்போடு இருந்து விட்டது. வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றியது தான் மிச்சம். 15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வரும் என்று சொன்னாரே மோடி. நடந்ததா? மேலும் நம்மிடம் இருந்த பணம் செல்லாது என்று அறிவித்து விட்டார்.

இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். கொடுத்தாரா? மாறாக கெடுத்தார்.

எங்களுக்காக அல்ல. நாங்கள் வந்தாலும் வராவிட்டாலும் இங்கே நமது ஷாநவாஸ் வெற்றி பெறுவது உறுதி. தி.மு..ஆட்சி அமைப்பது உறுதி.

மந்திரக்கோல் போல ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு மோடி வித்தை காட்டி வருகிறார். அதற்கு இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.வெற்றிபெறப் போவது தளபதி ஸ்டாலின் அவர்கள் தான் என்று மத்திய அரசும் உணர்ந்து விட்டது.

வேறு வழியில்லாமல் கடைசி நேர ஆயுதமாக வருமான வரி இலாகாவை ஏவி விட்டு சதி செய்கிறார்கள்.

வடக்கில் இருந்து வந்த பிரதமர் மதுரை வீரன் படத்தை பற்றிப் பேசுகிறார் என்றால் கடைசி நேர ஆயுதமாக பயன்படுத்தி ஏமாற்றலாம் என்று எண்ணுகிறார்.எல்லா  எதிர்க் கட்சி வேட்பாளர்களும்மோடிஜி அவர்களே எங்கள் தொகுதிக்கும் வாருங்கள் கூடுதலான வாக்குகள் கிடைக்கும்என்று சொல்கிறார்களே, வெட்கமாக இல்லையா?

பிரதமரின் நிலை இப்படியா போவது? இங்கேயிருக்கும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதத்தால் மாறுபட்டவர்கள் - இனத்தால் திராவிடர்கள் அல்லவா? அவர்களுக்கும் கொடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து - சி... என்று இன்றைக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த நிலையில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க அருமைத் தோழர் முகம்மது ஷா நவாஸ் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கீழ்வேளூர் தொகுதியில் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்  வி.பி.நாகை மாலி அவர்களை ஆதரித்து நேற்று (3.4.2021) கீழ்வேளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.. நெப்போலியன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா வரவேற்புரை வழங்கிட மாவட்ட துணை செயலாளர் பாவா.ஜெயக்குமார், மாவட்ட இணை செயலாளர் இராமலிங்கம், நாகை நகர செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் கமலம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தங்கராசு, ஒன்றிய தலைவர் துரைசாமி, கீழையூர் ஒன்றிய தலைவர் ரங்கநாதன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில்  கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில் குறிப்பிட்டது வருமாறு:

நம்முடைய பாசறைகளில் ஒன்றான கீழ்வேளூர் தொகுதியில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பா...வின் முழுமையான அடிமையாக இருக்கும் .தி.மு..தலைமையிலான கூட்டணி ஒரு பக்கம்.போராட்ட களத்தில் கைகோர்த்து இணைந்த கூட்டணி நமது கூட்டணி. இந்த கூட்டணிக்கு சிறப்பான முறையில் இடங்களைப் பங்கிட்டு வழங்கினார் தளபதி ஸ்டாலின் அவர்கள். சிறந்த தத்துவத்தை முதல்வர் பழனிச்சாமி சொல்கிறார்.அதாவது கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்று!

திராவிடம் வேறு! இடதுசாரி வேறு ! அல்ல!!

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பதுதான் திராவிடம்.அனைவரும் சமம் என்பதுதான் பொதுவுடைமை இயக்கம்.

தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா?  மாநில பட்டியலில் உள்ள உரிமையில் விவசாயமும் இருக்கிறது. ஆனால் நானும் விவசாயி என்று கூறும் முதல்வர் பழனிசாமி இதற்கு ஆதரவு தெரிவிக்கலாமா? நமக்கு ஓட்டுக் கண்ணோட்டம்  இல்லை, நாட்டுக் கண்ணோட்டம் தான், அதனால்தான் கரோனா காலத்தில் கூட உயிரைப் பற்றி கவலைப்படாமல் வந்திருக்கிறோம்.

வார்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் என அனைத்து நேரத்திலும் இந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட வராதவர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி அடிக்கக் கூடிய புயலில் காணாமல் போவார்கள். இது உறுதி. எனவே தோழர் வி.பி.நாகை மாலி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.

பரப்புரை கூட்டத்தில் மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்ச் செல்வி, திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், தி.மு..ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், நகர தி.மு..செயலாளர் அட்சயலிங்கம், தி.மு.. பொறுப்பாளர் அங்காடி சேகர், காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜா, சி.பி.எம்.ஒன்றிய செயலாளர் அபுபக்கர், பாண்டியன், வி.சி..ஒன்றிய செயலாளர் ராஜேஷ், வி.பி.குணா, அருந்ததியர் மக்கள் சங்க தலைவர் பாலகுரு, மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, திருவாரூர் முனியாண்டி, மாவட்ட .. தலைவர் இரா.சிவக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய இளைஞரணி தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

மேற்கண்ட இரண்டு பரப்புரை பயணக் கூட்டத்திலும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா..சுப்பிரமணியம், அமைப்பு செயலாளர் மதுரை செல்வம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

Comments