அன்று கேட்ட குரல்!

 நம் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி இந்த  நெருக்கடியைக்  கையாள்வதில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டு வருகிறார். பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் பிரதமர், ராஜ தர்மத்தைக் கடைபிடிக்கவேண்டும்.

- ரந்தீப் சுர்ஜேவாலா,

தலைமைச் செய்தித் தொடர்பாளர்,

அகில இந்திய காங்கிரஸ் (‘தினமலர்', 15.4.2021, பக்கம் 10)

குஜராத் மாநிலம் டாங்கல் மாவட்டத்தில் முதல மைச்சர் நரேந்திர மோடி ஆட்சியில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, நேரில் பார்வையிட்ட பிரதமர் வாஜ்பேயி, முதலமைச்சர் மோடியைப் பார்த்து சொன்ன அதே வார்த்தைகள்  ‘‘ராஜ தர்மத்தைக் கடைபிடியுங்கள்'' என்பதே!

இவற்றின் பொருள் என்ன?

மோடி எப்போதுமே ராஜதர்மத்தைக் கடைபிடிக் காதவரே!

Comments