தமிழகத்தில் சிகிச்சைக்காகக் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்

சென்னை, ஏப். 16- தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதி கரித்தப்படி உள்ளது.

கடந்த ஆண்டு கரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப் பட்டன. கடந்த செப்டம்பர் மாதத் துக்கு பிறகு கரோனா தாக்கம் குறைய தொடங்கியது. அதன் பிறகு கல் லூரி களில் அமைக்கப்பட்டிருந்த கரோனா  வார்டுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது சென்னையில் கரோனா பரவல் மீண்டும் அபாயகரமான அளவுக்கு மாறி உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் அது உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள் ளனர். இதையடுத்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தமிழக சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக கரோனா நோயா ளி கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட் சத்தில் அவர்களுக்கு தேவை யான சிகிச்சை உபகரணங்களை தயார் செய்வது மற்றும் சிகிச்சை அளிப்ப தற்காக படுக்கை வசதி, செயற்கை சுவாச வசதிகளுடன் கூடிய இடங் களை தயார் செய்வது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை யில் உள்ள கல்லூரிகளை மீண்டும் கரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 11 ஆயிரத்து 875 படுக் கைகளை தயார் செய்யும் வகையில் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற உள்ளன. வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 400 படுக்கைகள் தயார் செய்யப்பட உள்ளன. டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி யில் 230 படுக்கைகளும், பாரதி பெண் கள் - மகளிர் கல்லூரியில் 350 படுக்கை வசதிகளும் மேற் கொள்ளப்பட உள் ளன. - அத்திப்பட்டில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 5,130 படுக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. விக்டோரியா ஹாலில் 570 படுக்கைகள் அமைக்கப் பட் டுள்ளன. ஜவஹர் பொறியியல் கல்லூரியில் 400 படுக்கைகள், கிண்டியில் உள்ள தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் 225 படுக் கைகள் தயார் செய்யப் படுகிறது.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அறைகளில் 1,500 படுக்கைகள் உருவாக்கப் படுகின்றன. சென்னை அய்.அய்.டி.யில் 420 படுக் கைகள், குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகள், ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் 500 படுக்கைகள், முகமது சதக் செவிலியர் கல்லூரியில் 900 படுக்கைகள் தயார் செய்யப்பட இருக்கின்றன. இதனால் இந்த கல்லூ ரிகள் - முழுமையாக கரோனா சிகிச்சை வார்டு மய்யங்களாக மாற உள்ளன.

இந்த மாத இறுதிக்குள் இந்த கல்லூரிகள் அனைத்தும் கரோனா வார்டு சிகிச்சை மய்யங்களாக மாறி தயார் நிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த ஏற் பாடுகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள் ளது.

தென்னக ரயில்வே மூலம் சுமார் 500 ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற் றவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Comments