ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

எதிர்க்கட்சியில் உள்ள அரசியல்வாதிகளை 'நல்ல நடத்தைக்கு' ஒரு பத்திரத்தில் கையெழுத்தும், அத்துடன் குறிப்பிட்ட தொகையும் தர வேண்டும் என உத்தரவாதம் தர வேண்டும் எனக் கோரும் எந்தவொரு நாடும் சுதந்திர உலகில் உள்ளதா என்ற கேள்விக்கு, காஷ்மீரில் தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள பிரிட்டிஷ் கால சட்டமே சாட்சி என மூத்த வழக்குரைஞர் .ஜி. நூரணி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சீதால்குச்சி சட்டமன்ற தொகுதியில் கூச் பெகர் பகுதியில் வன்முறை ஏற்பட்டதால்தான் சி.ஆர்.பி.எப். காவலர்கள் சுட்டார்கள் என்பது ஏற்புடையது அல்ல. அங்கு வன்முறை ஏற்பட்டதற்கான சான்றுகளும் இல்லை என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல் சென்னை:

மேற்கு வங்கத்தில் கூச் பெகர் பகுதியில் நான்கு பேர் சி.ஆர்.பி.எப். காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் உண்மைகளை மறைக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

· .பி. தலைநகர் லக்னோவில் சுடுகாட்டில் நெரிசல் காரணமாக, ஒரே ஆம்புலன்சில் மூன்று இறந்த உடல்களை சுமந்து கொண்டு இரண்டு நாட்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது துயரமடைந்த குடும்பங்களுக்கு ஆம்புலன்ஸ் கட்டணத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவிடுவது மட்டுமல்லாமல், நகரத்தில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

டெக்கான் ஹெரால்டு:

· கரோனா தடுப்பூசி போடும் இயக்கம் பிரதமர் மோடி கூறுவது போல் திருவிழா அல்ல; அது ஓர் போர் என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும், பொருட்களை அதிகரிப்பதற்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என்றும் சிதம்பரம் கோரினார்

- குடந்தை கருணா

12.4.2021

Comments