சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்

பெங்களூரு, ஏப். 12 கோவிட்-19 பாதிப்பால் புலம்பெயர் தொழிலா ளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் இருக்கின்றனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பால் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. இதன் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் மிகவும் வேதனையுடன் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பின்னர் நிலைமை சீரடையத் தொடங்கி யதும் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மீண்டும் பணிக்கு திரும் பினர். இந்நிலையில் கரோனாவின் இரண்டாவது அலை தொழி லாளர்களை மீண்டும் மூட்டை முடிச்சுகளை கட்ட வைத்துள்ளது.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், தற்போதே சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக கருநாடக மாநிலம் பெங்களூருவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலவற்றில் பணி யாற்றி வரும் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். அதில் கட்டுமானத் தொழிலாளர்கள் தான் அதிக அளவில் உள்ளனர்.

கருநாடக மாநிலத்தில் பணி புரிந்து வரும் 30 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் பிப்ரவரி மாத இறுதியில் மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு புறப்படத் தொடங்கிவிட்டனர். இதுவரை 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கின்றனர். இதனால் தொழில் நிறுவனங்கள் கடும் தொழி லாளர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. அதில் கட்டுமான தொழில்கள் முதன்மையாக உள்ளன.

 ஏற்கெனவே மும்பை, சூரத், டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்ட நிலையில் தற்போது பெங்களூருவிலிருந்தும் தொழிலாளர்கள் புறப்படத் துவங்கியதால் மீண்டும் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் முடக்கப் பட்டு மீண்டு வரும் பொருளாதாரம் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment