நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தக்கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி, ஏப். 13- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் தள் ளுபடி செய்தது. பா..., தலை வரும், மூத்த வழக்குரைஞரு மான, அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் கூறப்பட்டு உள்ள தாவது:

உச்சநீதிமன்ற நீதிபதிக ளின் ஓய்வு வயது, 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது, 62 ஆகவும் நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடின்றி, இரு நீதிமன் றங்களிலும், நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை, 65 ஆக நிர்ணயிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இத னால், உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம் என்ற எதிர் பார்ப்பின்றி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்னும் சுதந்திர மாக தங்கள் பணியை திறம் பட செய்வர். மேலும், வழக்கு களை விரைவாக முடிக்கவும் முடியும். ஒரே சீரான ஓய்வு வயது நிர்ணயித்தால், உயர் நீதிமன்றத்தில், அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் பணியாற் றும் நிலை ஏற்படும். இது, மிக முக்கியமான அல்லது அர சியல் சாசன சட்டப் புலமை தேவைப்படும் வழக்குகளை கையாள உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவை, நேற்று, உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி, எஸ்..பாப்டே தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து, மத்திய சட்ட அமைச் சகத்திடம் இது குறித்து விண் ணப்பிக்கும்படி உத்தரவிட் டது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக, மனு தாரரின் வழக்குரைஞர், அஸ்வனி குமார் துபே தெரிவித்தார்.

Comments