போர்க் கப்பலை உடைக்கும் பணி; தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி, ஏப். 13- நாட்டின் மிகப் பழமையான போர்க் கப்பலான, அய்.என்.எஸ்., விராட்டை உடைக்கும் பணி களுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அய்ரோப்பிய நாடான பிரிட்டனின் கடற்படையி லும், பின், நம் கடற்படையில், 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றியுள்ளது, அய். என்.எஸ்., விராட் போர்க் கப்பல்.

கடந்த, 2015இல், இந்தப் போர்க் கப்பலை இதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்றும், அதை உடைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 'இந் தப் போர்க் கப்பலை அருங் காட்சியகமாக மாற்ற வேண் டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதற்காக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த சிறீராம் நிறுவனம், 35.8 கோடி ரூபாய்க்கு அதை வாங்கியது.

குஜராத்தின் அலாங்க் பகு தியில், அந்த கப்பலை உடைக் கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 'என்விடெக்' என்ற கப்பல் ஆலோசனை நிறுவ னம், கப்பலை வாங்குவதற்கு தயாராக இருந்தது. இது தொடர்பாக பல சுற்று பேச்சு நடத்தப்பட்டும், சிறீராம் நிறுவனம் தயாராக இருந்தும், இராணுவ அமைச்சகத்திடம் இருந்து பதில் கிடைக்க வில்லை.

வழக்கு

இதையடுத்து, கப் பலை உடைப்பதற்கு தடை கோரி, அந்த நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், உச்சநீதி மன்றம் நேற்று அளித்த தீர்ப்பு: நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். ஏற்கெனவே, கப்பலின், 40 சதவீதம் உடைக்கப்பட்டு விட்டது. இதற்கு மேலும், கப்பலை உடைப்பதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு அமர்வு தீர்ப்பளித்தது.

Comments