மம்தா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

மம்தா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா, ஏப். 13- மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளைக் கொண்டுள்ள சட்டமன்றத்துக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடை பெறுகிறது. ஏற்கெனவே 4 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண் ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகை யில் 44 தொகுதிகளுக்கு 5ஆம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட் டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத் தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் னர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மேற்குவங்காள முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கி ரஸ் தலைவருமான மம்தா, முஸ்லிம்கள் வேறு கட்சிகளுக்கு வாக் களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாக தேர்தல் ஆணை யத்தில் பாஜக புகார் அளித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி விளக்கம் கேட் டது. இதையடுத்து, தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மம்தா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், மம்தா அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாக இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிதற்காக மம்தா 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட தடை விதித்து தேர்தல் ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment