தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் இடி, மின்னல், காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஏப்.13- தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட் கள் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப் புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

தென் தமிழகம் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று 13ஆம் தேதி தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடு துறை ஆகிய டெல்டா மாவட்டங் கள் மற்றும் காரைக் கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

14ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழ கத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், நீலகிரி கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும்.

15ஆம் தேதி தமிழகம், புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தரும புரி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும்.

16ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர்  கூறினார்.

Comments