கரோனா பாதிப்பு: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்

 சென்னை, ஏப். 13 சென்னையில் கரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவ தால் மீண்டும் பள்ளி, கல்லூ ரிகள் கரோனா பாதித்த வர்களை தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டு வரு கின்றன.

இந்தியாவில் 2ஆவது அலை கரோனா பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்திலும் அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகரான சென்னையில் கரோனா பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.

சென்னையில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்து வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்க ளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை மாநக ராட்சி பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக ளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகளை ஏற் படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன் படி, தொடர் தீவிர சிகிச்சை கள் தேவைப்படுபவர்களுக்கு பெரிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கரோனா காரணமாக பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உதவி தேவைப் படும் நோயாளிகளுக்கு சிறிய மருத்துவமனைகளில் படுக் கைகளை ஒதுக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள் ளது. அதேநேரம் அறிகுறி இல்லாத கரோனா நோயா ளிகளை தனிமைப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அம்பேத்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் 11,775 படுக்கை கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்தபோதும் இதே நடைமுறை பின்பற் றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments