இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்காக ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி

 


புதுடில்லி, ஏப்.13 இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த ரஷ்ய தடுப்பூசிக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது.

உலகையே தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்திருக்கும் கரோனாவை வேரறுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி களை தயாரித்து உள்ளன. இந்தியாவும் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனம் இந்த தடுப்பூசியை தயா ரித்தது.

இதைத்தவிர ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவ னங்கள் கண்டுபிடித்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த 2 தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி (டி.சி.ஜி.அய்.) ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்த 2 தடுப்பூசி களும் நாடு முழுவதும் முழுவீச்சில் போடப்பட்டு வருகின்றன.

முன்னதாக கரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி யை ரஷ்யா தயாரித்து இருந்தது. உலக அளவில் கரோனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தடுப்பூசி யாக இது திகழ்கிறது.

இந்த தடுப்பூசியின் 3ஆவது கட்ட மருத்துவ பரிசோதனையில் இது 91.6 சதவீத செயல்திறன் மிகுந்தது என்ப தும் தெளிவாகியது. இந்த தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகள் ஒப்புதல் அளித்து தங்கள் நாடுகளில் பயன்படுத்தி வருகின்றன.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கும், தயாரித்து வினி யோகிப்பதற்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம், ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தில் இருந்து உரிமம் பெற்று இருக்கிறது.

இதைத்தொடர்ந்து இந்த தடுப் பூசிக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப் பிடம் (சி.டி.எஸ்.சி..) டாக்டர் ரெட்டி ஆய் வகம் விண்ணப்பித்தது. இதை சி.டி.எஸ்.சி..வின் சிறப்பு நிபுணர் குழு பரிசீலித்தது.

தற்போது, ஸ்புட்னிக்விதடுப் பூசியை இந்தியாவில் குறிப்பிட்ட சூழல்களில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அந்த குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த ஒப்புதல் இனி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர் இது குறித்து இறுதி முடிவு எடுப்

பார்.

அவரும் ஸ்புட்னிக்விதடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் அவசர தேவைகளுக்காக ரஷ்யாவில் இருந்து இந்த தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும். அப்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் 3ஆவது தடுப்பூசி யாக ஸ்புட்னிக் வி இருக்கும்.

இந்தியாவில் தற்போது கரோனா வின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் ஸ்புட்னிக்விதடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத் திருப்பது இந்திய தடுப்பூசி பணிகளுக்கு மேலும் உந்துசக்தியாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Comments