தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் கரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரிப்பு

புதுடில்லி,ஏப்.13- நாட்டில் தமிழகம், மராட்டியம், உத்தரப்பிரதேசம் உட்பட, 10 மாநிலங்களில், கரோனா தொற்று பரவல், தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

கரோனா நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று  (12.4.2021) வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம், மராட்டியம், உத்தரப் பிரதேசம், டில்லி, சத்தீஸ்கர், கருநாடகா உட்பட, 10 மாநிலங்களில், கரோனா தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த, 24 மணி நேரத்தில், 1.69 லட்சம் பேரிடம் பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இவர்களில், 83.02 சதவீதம் பேர், இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.மராட்டி யத்தில், 63 ஆயிரத்து, 294 பேரிடமும், உத்தரப் பிரதேசத்தில், 15 ஆயிரத்து, 276 மற்றும் டில்லியில், 10 ஆயிரத்து, 774 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவல் வேகம் உயர்வால், தற்போது சிகிச் சையில் இருப்போர் எண்ணிக்கை, 12 லட்சத்தை கடந்துள்ளது.இவர்களில், 70.16 சதவீதம் பேர் மராட்டியம், சத்தீஸ்கர், கரு நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தோர்.

இதுவரை, 15.56 லட்சம் அமர்வுகள் வாயிலாக, நாடு முழுவதும், 10.45 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப் பட்டு உள்ளன.சுகாதாரத் துறையைச் சேர்ந்த, 55.24 லட்சம் பேர், இரு டோஸ்களும், 90.13 லட்சம் பேர், முதல் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.

முன்களப் பணியாளர்களில், 47.95 லட்சம் பேருக்கு, இரு டோஸ்களும், 99.96 லட்சம் பேருக்கு, ஒரு டோசும் தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது.பணிகள் விரைவுஅதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில், 19.42 லட்சம் பேர், இரு டோஸ்களும், 4.05 கோடி பேர். முதல் டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுஉள்ளனர்.

அடுத்ததாக, 45 - 60 வயதிற்கு உட்பட்டவர் களில், 6.78 லட்சம் பேருக்கு முதல் டோசும், 3.20 கோடி பேருக்கு, இரு டோஸ்களும் செலுத்தப்பட்டு உள்ளன.தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளதால், கடந்த, 24 மணி நேரத்தில், 30 லட்சம் டோஸ்கள், மக்களை சென்றடைந்து உள்ளன.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.ஒரே நாளில், 904 பேர் பலிகடந்த, 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பிற்கு உள்ளான, 1.69 லட்சம் பேருடன், பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 1.35 கோடியை கடந்துள்ளது.

இவர்களில், ஒரு கோடியே, 21 லட்சத்து, 56 ஆயிரத்து, 529 பேர், குணமடைந்து உள்ளனர். கரோனாவால் நேற்று ஒரே நாளில், 904 பேர் உயிரிழந்து உள்ளனர். மராட்டியத்தில் அதிகபட்சமாக, 349 இறப்புகள் பதிவாகி உள்ளன.

சத்தீஸ்கரில் 122 பேரும், உத்தரப்பிரதேசத் தில்67, பஞ்சாபில் 59, குஜராத்தில் 54, டில்லியில் 48, கருநாடகாவில் 40, மத்தியப்பிரதேசத்தில் 24, தமிழகத்தில் 22 பேரும் பலியாகி உள்ளனர். நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறியுள்ளது.

Comments